பிபா உலகக்கிண்ணம் ! முட்டி மோதிய அவுஸ்திரேலிய டென்மார்க் அணிகள் ! சமநிலை முடிவு

0

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் மூன்று போட்டிகள் இடம்பெற்றன . முதல் ஆட்டம் இலங்கை நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இதில் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. டென்மார்க் அணியின் எரிக்சன் கோல் அடித்து அசத்தினார். இதனால் தொடக்கத்திலேயே டென்மார்க் 1-0 என முன்னிலைப் பெற்றது.

ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா வீரர் லெக்கி ரோஸ் தலையால் அடித்த பந்தை டென்மார்க் வீரர் யூசுப் பவுல்சன் தடுக்க முயன்றபோது பந்து கையில் பட்டது. நடுவர் ஏயுசு உதவியுடன் பெனால்டி வாய்ப்பு கொடுத்தார்.

இதை பயன்படுத்தி 38-வது நிமிடத்தில் ஜெடினாக் கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை அடைந்தது. அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

‘சி’ பிரிவில் டென்மார்க் ஒரு வெற்றிஇ ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும்இ ஆஸ்திரேலியா ஒரு தோல்விஇ ஒரு டிராவுடன் 1 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.