பிரித்தானியாவில் பத்து வருடங்களுக்கு மேலாக சட்டவிரோதமாக குடியிருப்போருக்கு குடியுரிமை வழங்க முடியாது என பிரித்தானிய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது .
10 வருடங்களுக்கு மேலாக பிரித்தானியாவில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் தலைமையில் இணையதளம் ஊடக கையெழுத்து போராட்டம் நடாத்தப்பட்டு பிரித்தானிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது .எனிலும் சட்டவிரோத குடியிருப்பாளர்களின் கோரிக்கையை பிரித்தானிய அரசு நிராகரித்துள்ளது .
10 வருடங்களுக்கு மேலாக தங்கியிருக்கும் சட்ட விரோத குடியிருப்பாளர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டால் அது மேலும் சட்ட விரோத குடியேற்றத்தை ஊக்குவிக்கும் செயலாக அமையும் என்று பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது .
இலங்கையில் இடம்பெற்ற போரில் பாதிப்படைந்த நூற்றுக்கணக்கான இலங்கை தமிழர்கள் பிரித்தானியாவில் பத்து வருடங்களுக்கு மேலாக அரசியல் தஞ்சம் கோரி வசித்து வருகின்றார்கள் .நிரந்தர குடியுரிமை இல்லாத காரணத்தினால் நாள்தோறும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர் .பிரித்தானிய அரசு 10 வருடங்களுக்கு மேலாக சட்ட விரோதமாக தங்கியிருப்போருக்கு குடியுரிமை வழங்கும் என்று இலங்கை தமிழர்கள் பெரிதும் நம்பி இருந்தார்கள் .ஆனால் குடியுரிமை வழங்க முடியாது என்று பிரித்தானிய அரசு கைவிரித்துள்ளமையானது நூற்றுக்கணக்கான ஈழ தமிழர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இலங்கை பிரச்சனையை காரணமாக வைத்து போரில் பாதிக்கப்படாத பலர் , போராட்டத்துடன் சம்பந்தம் இல்லாத பலர் பிரித்தானியவில் நிரந்தர குடியுரிமையை பெற்றுள்ளனர் .இதில் முஸ்லீம்கள் மற்றும் சிங்களவர்களும் அடங்குவர் .ஆனால் யுத்தத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் உண்மையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படாதது வேதனைக்குரியது .