இளைய தளபதி விஜய் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தினை இரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார் .நடிகர் விஜய்யின் 44வது பிறந்தநாள் 22ம் தேதி வருகிறது. அவரின் பிறந்தநாளை கொண்டாட 100 நாட்களுக்கு முன்பே ரசிகர்கள் தயாராகிவிட்டனர். டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி திருவிழா போன்று கொண்டாட தொடங்கி விட்டார்கள் .ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தினை அளிக்கும் வகையில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார் .
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். அவர்கள் குடும்பங்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ள போது தனது பிறந்தநாளை தான் கொண்டாட விரும்பவில்லை என்று விஜய் தெரிவித்துள்ளார் .தமிழ் மக்கள் மீது விஜய் வைத்துள்ள அன்பு , மற்றும் தமிழ் மீதுள்ள பற்று விஜய் ரசிகர்களை மட்டுமல்லாது மற்றைய நடிகர்களின் ரசிகர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .