புங்கிடுதீவு கடற்கரையில் கரையொதுங்கிய மீனவ சகோதரர்களின் சடலங்கள்

0

நேற்றைய தினம் புங்கிடுதீவு கடற்கரையில் கரையொதுங்கிய மீனவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது .ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களான தோ.கிறிஸ்ரின் கூஞ்ஞ (வயது-32) மற்றும் தோ.எமல்ரன் கூஞ்ஞ (வயது 37) ஆகியோரின் சடலங்களே கரையொதுங்கியுள்ளது .

தலைமன்னார் கடற்பகுதியூடாக கடந்த வெள்ளிக்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்று காணாமல் போன
இந்த மீனவர்கள் 5 நாட்களின் பின் நேற்று மதியம் யாழ். புங்குடுதீவு கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடலில் போடப்பட்ட நண்டு வலையை கரை சேர்ப்பதற்காக படகு ஒன்றில் இந்த இரண்டு மீனவ சகோதர்களும் கடலும் சென்றிருந்த வேளையிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.