புறா காட்டுவதாக கூட்டி சென்று கயிற்றினால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்! யாழ்ப்பாணம் சிறுமியின் கொலை! 6 வது சந்தேகநபர் வாக்கு மூலம்!

0

யாழ்ப்பாணம் – சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி தொடர்பில் பல தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போதும் சில விடயங்கள் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்டுள்ள 6 சந்தேகநபர்களில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் 21 வயதுடைய இளைஞன் வழங்கிய வாக்குமூலத்திலிருந்து பல விடயங்கள் வெளிவந்திருந்தன.

இந்த கொலையை தானே செய்ததாகவும், தோட்டுக்காக கொலை செய்ததாகவும், தான் மட்டுமே இதில் சம்பந்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.தற்போது குறித்த நபர் தெரிவித்த மேலும் சில வாக்குமூலங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,சம்பவ தினத்தன்று சிறுமி பாடசாலை முடிந்து வந்ததும் புறா காட்டுவதாக ஆசை வார்த்தை காட்டி மறைவான இடத்திற்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.அங்கு வைத்து குறித்த சிறுமி துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். எனினும் குறித்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருடைய துன்புறுத்தல்களால் குறித்த சிறுமி மயக்கமடைந்துள்ளார். பின்னர் சிறுமியின் தோட்டை எடுத்து விட்டு, மாடுகள் கட்டும் கயிற்றால் சிறுமியின் கழுத்தை நெரித்துள்ளார். பின்னர் சிறுமியின் உடலை கிணற்றுக்குள் வீசியுள்ளார்.இவை அனைத்தும் 21 வயது இளைஞனின் வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் கூறியது போலவே சிறுமியின் சீருடை, புத்தகப்பை என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.இதேவேளை சிறுமியை காணவில்லை என ஊர் மக்கள் தேடும் போது இந்த இளைஞனும் நேர்ந்து சிறுமியை தேடியுள்ளார்.

ஆனால் இந்த இளைஞன் இதன்கு முன்னர் அப்பகுதிக்கு வராத நிலையில், அன்று மட்டும் வந்தது ஏன்? சிறுமியை தேடுவது ஏன்? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், பொலிஸாரிடம் இது குறித்து மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.மேலும், தந்தையை பழிவாங்குவதற்கு சிறுமி றெஜினாவை இளைஞர்கள் கொலை செய்துள்ளனர் என்றும், இதற்கு சிறுமியின் சிறிய தந்தையும் உதவியுள்ளார் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் குறித்த சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சு அடங்கி உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே சிறுமியின் கொலையில் பல சந்தேகங்கள் எழுவதுடன் உண்மை கொலைகாரன் யார்? ஏன் கொலை செய்தான் என்பது பெரும் சந்தேகமாகவே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.