பூப்புனித நீராட்டு விழாவில் நேரடி வர்ணனை! என்ன கொடுமை சரவணா !- வினோத காணொளி உள்ளே

0

கிரிக்கெட் போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் நேரடி வர்ணனை இடம்பெறுவதை பார்த்திருப்பீர்கள் கேட்டிருப்பீர்கள் . பூப்புனித நீராட்டு விழாவில் நேரடி வர்ணனை இடம்பெற்ற வினோத சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது .

கனடாவினை சேர்ந்த சிறுமி ஒருவரின் பூப்புனித நீராட்டு விழாவில் அங்கு நடந்த அனைத்தையும் நேரடியாக வர்ணனை செய்துள்ளார்கள் .இந்த காணொளியை பார்க்கும் போது தமிழினம் எங்கே போகின்றது என்ற கேள்வி ஒவ்வொருவரினதும் மனதினுள் எழும் என்பதில் சந்தேகம் இல்லை .

தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது பிள்ளைகளை தேடி அலைந்து வருகின்றார்கள். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றார்கள் .பட்டினி கிடக்கின்றார்கள் .தாயக மண் மீட்பு போராட்டத்தில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள் தமது வாழ்வாதாரத்தினை நகர்த்துவதற்கு படாத பாடு படுகின்றார்கள் .

இந்நிலையில் இவ்வாறான தேவையற்ற ஆடம்பரங்கள் தேவை தானா? இந்த ஆடம்பரங்களுக்கு வீணடிக்கப்டும் பணத்தினை போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவினால் அவர்களது வயிறும் மனதும் நிறையும் .

Leave A Reply

Your email address will not be published.