பெண்களின் பெயரில் போலி முகநூல் கணக்குகளை திறந்து ஆபாச படங்களை பதிவேற்றிய இளைஞர் வசமாக மாட்டினார் -காணொளி இணைப்பு
பெண்களின் பெயரில் போலி முகநூல் கணக்குகளை திறந்து அந்த பெண்களின் புகைப்படங்களுடன் ஆபாச புகைபடங்கையும் பதிவேற்றிய இளைஞர் ஒருவர் வசமாக மாட்டிய சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது .
குறித்த இளைஞரும் பாதிக்கப்பட்ட பெண்களும் முன்பு ஒரே அலுவலகத்தில் பணியாற்றியுள்ளனர் .அதன் போது குறித்த இளைஞர் பாதிக்கப்பட்ட பெண்களுடன் பழகியுள்ளார் .அந்தப் பெண்கள் இளைஞரை தமது தம்பியாக நினைத்து பழகியுள்ளார்கள் .ஆனால் வக்கிர புத்தி கொண்ட இளைஞர் அந்த பெண்களின் பெயரில் போலி முக நூல் கணக்குகளை திறந்து ஆபாச படங்களை பதிவேற்றி பெண்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார் .
பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த இளைஞரை கையும் களவுமாக பிடிப்பதற்காக பெண்ணின் பெயரில் போலி முக நூல் ஒன்றை திறந்து அந்த கணக்கில் இருந்து இளைஞருடன் அரட்டை அடித்துள்ளார்கள் .இளைஞர் தன்னுடன் அரட்டை அடிப்பவர் உண்மையில் பெண் என்று முழுமையாக நம்பினார் .அரட்டையின் உச்ச கட்டத்தில் குறித்த இளைஞர் தன்னுடன் அரைட்டை அடிக்கும் பெண்ணை நேரில் சந்திக்க கேட்டுள்ளார் .இது தான் சந்தர்ப்பம் என்று இளைஞரை பிடிப்பதற்காக நேரில் சந்திக்க சம்மதம் தெரிவித்தனர் .
தன்னுடன் அரைட்டை அடித்த பெண்ணை நேரில் சந்திக்கும் ஆவலுடன் ஸ்டைல் ஆக உடையணிந்து இளைஞர் சென்ற வேளையில் இளைஞர் கையும் களவுமாக மடக்கி பிடிக்கப்பட்டார் .இளைஞரை குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு போன பெண்கள் தமது வீட்டில் வைத்து இளைஞரிடம் இருந்து உண்மையை கக்க வைத்துள்ளனர் .
உங்களின் பெயரில் போலி முகநூல் கணக்கினை திறந்து உங்கள் புகைப்படங்களுடன் ஆபாச புகைப்படங்களை பதிவேற்றியது நான் தான் என்று இளைஞர் ஏற்றுக்கொண்டுள்ளார் .காணொளியை கீழே பாருங்கள் .