தமிழீழ விடுதலைப் போராளிகளின் இன்றைய நிலை பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன. முன்னாள் போராளிகளும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அண்மையில் விசுவமடுவில் இராணுவ அதிகாரிக்கு பிரியாவிடை செய்தவர்களில் சிலர் முன்னாள் போராளிகள் என்றும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் 1987இல் Frontline என்ற இதழ் தலைவர் பிரபாகரனைப் பார்த்து எழுப்பிய கேள்விகளை இங்கே தருகிறோம்.
ஏறத்தாழ 5000 பேர் வரை இருக்கும் உங்கள் போராளிகளின் எதிர்கால வாழ்வு என்னவாக இருக்கும்?
அவர்களை நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம். அவர்கள் தங்களுக்கான வாழ்வாதாரத்தை தொடர ஒரு திட்டமிட்ட வரைபை அவர்களின் எதிர்கால வாழ்வுக்காக உருவாக்குவோம்.
அது எந்த வழியில் இருக்கும்?
அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை உருவாக்குவோம். அவர்களில் யாருக்காவது படிக்க வேண்டி இருந்தால் அதனை தொடர ஏற்பாடுகள் செய்வோம். அவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவோம். அவர்கள் எப்பொழுதும் ஒழுக்கத்துடன் இருப்பார்கள். பல் வழிகளில் அவர்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
தலைவர் வே. பிரபாகரன். Frontline magazine, 1987