மகிந்தவுடன் பேச சம்பந்தன் தயாராம்! ஏன் இன்னுமொரு 5 வருடத்தை வீணாக்கவா?

0

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற “நீதியரசர் பேசுகிறார்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வெளியில் சென்ற போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் அவருடன் பேசி, பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கூட்டமைப்பினால் இயன்ற அளவு முயற்சிகள் மேற்கொண்டிருந்தது.

எனினும் மஹிந்த அதை உதாசீனம் செய்துவிட்டார். அப்போது அவர் நேர்மையாக நடக்கவில்லை.

ஆனால் இப்போது திருந்தி எங்களுடன் பேசுவதற்கு தயாராக இருப்பாரானால் மஹிந்த ராஜபக்ஸவுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மைத்திரி தீர்வு தருவார் என்று இந்த ஆட்சியில் ஏமாற்றிவிட்டு, திரும்ப மகிந்தவுக்கு ஆதரவளித்து இன்னொரு ஐந்து வருடங்கள் தமிழ் மக்களை ஏமாற்ற சம்பந்தன் விரும்புகிறாரா?

Leave A Reply

Your email address will not be published.