கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் விழா நேற்று பெங்களூரில் நடைபெற்றது.இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் ஆண்கள், பெண்கள் அணிகள் மற்றும் உள்ளூர் அணிக்காக விளையாடிய வீரர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் சர்வதேச போட்டி, உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்பட்டது.
2016-17இ 2017-18 ஆகிய இரண்டு சீசன்களில் மிக சிறப்பாக செயல்பட்ட வீரராக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது காதல் மனைவியான அனுஷ்கா சர்மாவுடன் கலந்துகொண்டு விருதினை பெற்றுக்கொண்டார் .