மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சன்னி லியோன்

0

படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சன்னி லியோன் தற்போது வீடு திரும்பி உள்ளார். #SunnyLeone

ஆபாச நடிகையான சன்னி லியோன், இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடன ஆடிய சன்னி லியோன், தற்போது ‘வீரமாதேவி’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திரைப்படங்கள் மட்டுமில்லாமல், டி.வி. நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வரும் சன்னி லியோனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார். இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை அன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது வீடு திரும்பியுள்ளார். மேலும் மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படியும் வலியுறுத்தியுள்ளார்கள். #SunnyLeone

Leave A Reply

Your email address will not be published.