மாத்தறை பிரதேசத்தில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.இதனால் மாத்தறை நகரில் பதற்றம் ஏற்பட்டது.
மாத்தறை நகரில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் கொள்ளையர்கள் கொள்ளையிட வந்துள்ளார்கள். முகத்தை மறைத்து துப்பாக்கி சகிதம் வந்த கும்பல் ஒன்று குறித்த நகை கடையில் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த வேளையில் பொலிஸார் அவர்களை மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர்.
இதன் போது பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது .இரண்டு பேர் கொள்ளையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் அருகில் மற்றுமொரு நபர் அங்கு வந்த பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பொலிஸார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள் .அதில் ஒருவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார் .காயமடைந்த மற்றைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது .அந்த காணொளியினை பொலிஸார் வெளியிட்டுள்ளனர் .