மாலைதீவு முன்னாள் ஜனாதிபதிக்கு 18 மாத சிறை

0

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூமுக்கு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .1978 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை மாலைதீவின் ஜனாதிபதியாக இருந்த அப்துல் கயூமுக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது .

அப்துல் கயூம் தனது ஆட்சி காலத்தில் நீதித்துறையை சுதநதிரமான முறையில் இயங்குவதற்கு அனுமதிக்கவில்லை என்ற குற்றத்திற்காகவே சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது .

அப்துல் கயூமுக்கு வழங்கப்பட்ட இந்த தண்டனையை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு வரவேற்றுள்ளது . மேலும் செப்டெம்பர் மாதம் நடைபெற இருக்கும் தேர்தலில் தமது வாக்குகளை சரியான முறையில் மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று மாலைதீவு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஈவா அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.