இலங்கை இராணுவத்துடன் இடம்பெற்ற போரில் வீரச்சாவு அடைந்த மாவீரர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் யோசனைக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் உயிரிழந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு நட்ட ஈடு வழங்கும் யோசனையை சில மாதங்களுக்கு முன்னர் மீள் குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார் .
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது . இதன் போது போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகளின் குடும்பங்களுக்கு நட்ட ஈடு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர்கள் சிலர் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
மேலும் , முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச ,லலித் அத்துலத்முதலி காமினி திசாநாயக்க போன்ற தலைவர்களை கொலை செய்த விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டுமா என அமைச்சர்கள் சிலர் ஆட்சேபித்துள்ளனர்.
போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் குடும்பங்களை கவனிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையல்லவா .நாம் எமது கடமையை சரியாக செய்தால் எதற்காக எம்மை கொன்றொழித்த பேரினவாத பேய்களிடம் கையேந்த வேண்டும் என்பதனை சிந்தித்து பாருங்கள் .