மின்சாரம் தாக்கியதில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் களனி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மாணவன் களனி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மாணவன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் .
கெபத்திகொல்லா பிரதேசத்தை சேர்ந்த குறித்த பல்கலைக்கழக மாணவன் தான் தங்கியிருந்த விடுதிக்கு அருகிலுள்ள அம்பரெல்லா மரத்தில் காய் பறிப்பதற்காக சென்றுள்ளார் .அம்பரெல்லா காயை பறிப்பதற்காக இரும்பு கம்பி ஒன்றை பயன்படுத்தியுள்ளார் .இதன் போது இரும்பு கம்பி மரத்தின் அருகில் இருந்த மின் கம்பத்தில் பட்டமையினால் மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளார்.
மாணவனின் இழப்பு களனிப்பல்கலைக்கழக மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .