முதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்!

0

விடுதலைப் போராட்ட ஆரம்ப காலகட்டத்தில் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவடைந்த தியாகி பொன் சிவகுமாரின் 44வது நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ். உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னால் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை , அவரது சகோதரி சிவகுமாரி ஆரம்பித்து வைத்தார்.

அதனை தொடர்ந்து அவரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வில் தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா, வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.

தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப காலகட்டத்தில் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது இலங்கை படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட போது தியாகி பொன் சிவகுமார், 1974ஆம் ஆண்டு இதே நாள் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.