முல்லைத்தீவு ஓட்டுசுட்டானில் நேற்றையதினம் விடுதலைப்புலிகளின் சீருடை , புலிக்கொடி மற்றும் கிளைமோர் குண்டு என்பன இராணுவத்தினரால் கண்டெடுக்கப்பட்டது .இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் .
ஓட்டுசுட்டானில் கண்டுபிடிக்கப்பட்ட கிளைமோர் குண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்வதற்காக தயார்படுத்தப்பட்டது என செய்திகள் கசிந்து இருந்தன .முன்னாள் போராளிகளே சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்டதாக இலங்கை இராணுவ புலனாய் பிரிவினர் நான்கு தினங்களுக்கு முன்னதாகவே தகவல் வழங்கியதாகவும் தெரிவிப்படுகின்றது.
எனிலும் தன்னை கொலை செய்ய முன்னாள் போராளிகள் முயற்சி செய்து வருவதாக வெளியான தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மறுத்துள்ளார்.தான் இலக்கு வைக்கப்படவில்லை என்றும் அவ்வாறு தனக்கு எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லை எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார் .
சுமந்திரன் ஏற்கனவே முன்னாள் போராளிகளால் தனது உயிருக்கு ஆபத்து எனக் கூறி, சிறப்பு அதிரடி படையினரின் பூரண பாதுகாப்பினை பெற்றுள்ளார் .இந்நிலையில் கிளைமோர் குண்டு வைக்கப்பட்ட சம்பவத்தினை சாட்டாக வைத்து மேலும் உயர் பாதுகாப்பினை பெற்று குண்டு துளைக்காத பவள் கவச வாகனத்தில் சுமந்திரன் வலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை .
ஏற்கனவே முன்னாள் போராளிகளால் தனது உயிருக்கு ஆபத்து என சுமந்திரன் கூறிய குற்றசாட்டினால் சில முன்னாள் போராளிகள் அரச படைகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்..இந்நிலையில் இந்த கிளைமோர் குண்டு விவகாரம் மேலும் முன்னாள் போராளிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்.முன்னாள் போராளிகளின் நிம்மதியை கெடுப்பதற்காக இலங்கை இராணுவம் திட்டமிட்டு விடுதலைப்புலிகளின் சீருடை , புலிக்கொடி மற்றும் கிளைமோர் குண்டினை வைத்து விட்டு அவர்களே அதனை கண்டுபிடித்து ஒரு நாடகத்தினை அரங்கேற்றியுள்ளனர் என்பது புலனாகின்றது .