மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி சாதனை படைத்த இலங்கை அணி

0

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை 1-1 என சமன் செய்து சாதனை படைத்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்த இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் மேற்கிந்திய அணி 226 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் தொடங்கும் போதுஇ பந்து சேதமடைந்துள்ளது புதிய பந்து கொடுத்தால் தான் விளையாடுவோம் என இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமல் தெரிவித்தார்.

இதையடுத்து பந்து எப்படி சேதமடைந்தது என ஆராய்ந்த போட்டி நடுவர்கள் சண்டிமல் தான் சேதப்படுத்தியதை கண்டறிந்தனர். இந்த போட்டி ஒரு வழியாக சமநிலையில் முடிந்தது.

போட்டி முடிந்ததை அடுத்து சண்டிமல் செய்த குற்றத்திற்கு 2 டெஸ்ட் மற்றும் 100மூ போட்டி சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 3வது டெஸ்ட் போட்டிக்கு லக்மல் கேப்டனாக பொறுப்பேற்றார்.
நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி முதல் இன்னிங்ஸில் 204 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. :தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை 154 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளும் இழந்தது.

பின்னர் 2வது இன்னிங்ஸை தொடங்கிய விண்டீஸ் வெறும் 93 ரன்களுக்கு இலங்கை சுருட்டியது..இதன் மூலம் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தின் போது 20 விக்கெட்டுகள் ஒரே நாளில் வீழ்ந்தது.

தொடர்ந்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை 6 விக்கெட் இழந்து 144 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விண்டீஸ் அணியை முதன் முறையாக 92 ரன்களுக்கு சுருட்டியுள்ளது இலங்கை அணி.
வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ்இ கென்சிங்டோன் ஓவல் மைதானத்தில் இலங்கை வென்ற முதல் போட்டி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.

3வது டெஸ்டில் விண்டீஸ் கேப்டன் ஜசன் ஹோல்டர் முதல் இன்னிங்ஸில் 74 ரன்களும்இ 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.2வது இன்னிங்ஸில் 15 ரன்களும் 5 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்.இதன் மூலம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.