யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் கடந்த 25 ம் திகதி ஆறு வயதுடைய சிவனேஸ்வரன் றெஜீனா என்ற சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் .இவரது சடலம் உடைகள் களையப்பட்டு உள்ளாடைகளுடன் கிணற்றில் போடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது .சிறுமி அணிந்திருந்த பாடசாலை சீருடை பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது .
சிறுமியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது .பெருந்திரளான மக்கள் சிறுமியின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர் .சிறுமியின் பிஞ்சு உடலினை பார்த்து மக்கள் கதறி அழுதுள்ளார்கள்.
சிறுமியின் கொலை தொடர்பில் இதுவரை ஆறு பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். சிறுமி துன்புறுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் .