நேற்று இரவு மல்லாகம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இரண்டு இளைஞர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலினை கட்டுப்படுத்துவதற்காகவே பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது .ஆனால் சகாய மாதா ஆலயப் பெருநாளில் கலந்துகொள்ள சென்ற இளைஞர்கள் மீதே பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக சம்பவத்தினை நேரில் கண்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .
பொலிசாரின் அடாவடியினால் அப்பாவி இளைஞன் கொல்லப்பட்டதை நேரில் கண்ட பொது மக்கள் கோபம் அடைந்தனர் . இதன் காரணமாக தேவாலயத்தில் திரண்டிருந்த மக்கள் போலீசாருக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
பொலிஸாருக்கு எதிராக மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பிரதேசத்தில் கடும் பதற்றம் நிலவியது .இதனால் தேவாலயத்தை சுற்றி தெல்லிப்பளை, சுன்னாகம் பிரதேசங்களில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர் .