யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலைசெத்துள்ளார் .குறித்த சம்பம் நேற்று மாலை வேலணை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
வேலனைணை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்றுவரும் மயூரன் மதுபன்(வயது 14) என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.குறித்த மாணவன் பாடசாலை விடுதியில் தங்கி இருந்து படித்துள்ளார் .நேற்றைய தினம் தனது வீட்டிற்கு சென்று சென்று வந்த மாணவன் பாடசாலை விடுதியில் உள்ள மலசல கூடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் .
மாணவனின் தற்கொலைக்கான காரணங்கள் இதுவரை அறியப்படாத நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை தீவக பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் .இலங்கையில் அண்மைக்காலமாக இளம் வயதினர் பலர் தற்கொலை செய்துவருவது குறிப்பிடத்தக்கது .