யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படு காயமடைந்துள்ளார்கள்.யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள், அங்கிருந்த இரண்டு இளைஞர்கள் மீதும் வாள்வெட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த வாள் வெட்டு சம்பவத்தில் கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த, 28 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
ஆவா குழு என்று அழைக்கப்படும் ஒரு கும்பல் யாழ்ப்பாணத்தில் அட்டகாசம் செய்து வந்தது .ஆவா குழுவினை சேர்ந்த உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணம் சற்று அமைதியாக இருந்தது .ஆனால் இப்போது மீண்டும் யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு காலாச்சரம் ஆரம்பித்துள்ளதை காண முடிகின்றது .மீண்டும் தலை தூக்கியுள்ள வாள் வெட்டு கலாச்சாரத்தினால் மக்கள் பதற்றத்தில் இருப்பதை உணர முடிகின்றது .
இரு தினங்களுக்கு முன்பு மல்லாகம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் திருவிழா இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இரண்டு இளைஞர் குழுக்கள் வாள்வெட்டு சண்டையில் ஈடுபட்டனர் .இதன் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .