யுத்தம் ஓய்ந்த இலங்கைக்கு ஏன் 64 பில்லியனில் ஹெலிக்கொப்டர்கள்?

0

பல ஹெலிக்கொப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை 64 பில்லியன் ரூபாய் செலவில் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளை இலங்கையின் விமானப்படை மேற்கொண்டுள்ளது.

ரஸ்யாவில் தயாரிக்கப்பட்ட எம் ஐ 171 எச் எஸ் ரக ஹெலிக்கொப்டர்களை ரஸ்யாவிடமிருந்து கொள்வனவு செய்வது குறித்து விமானப்படை தரப்புகள் ஆர்வம் காட்டிவருகின்றன.

மோதல் நடவடிக்கைகளிற்கும் படையினரின் போக்குவரத்திற்கும் பயன்படுத்தக்கூடிய இந்த வகை ஹெலிக்கொப்டர்கள் பத்தினை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.

இதேவேளை இலங்கை விமானப்படை நான்கு எம் ஐ 17 ஹெலிக்கொப்டர்களை 14.3 பில்லியன் ரூபாய் செலவில் கொள்வனவு செய்வதற்கான ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கியநாடுகள் அமைதிப்படை நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காகவே இவற்றை கொள்வனவு செய்யவேண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கியநாடுகளின் அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகள் தங்கள் ஆயுததளபாடங்களை பயன்படுத்தவேண்டியது கட்டாயமான விடயம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர 6.2 பில்லியன் செலவில் கண்காணிப்பு நடவடிக்கைகளிற்கு பயன்படக்கூடிய ஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்யும் ஆர்வத்தையும் விமானப்படை வெளியிட்டுள்ளது.

மேலும் பயிற்சி நடவடிக்கைகளிற்காக 4.8 மில்லியன் செலவில் அறு ஹெலிக்கொப்டர்களையும், மிக முக்கிய பிரமுகர்களின் போக்குவரத்திற்காக 11.48 பில்லியன் இரு பெல் 416 ரக ஹெலிக்கொப்டர்களை கொள்வனவு செய்யும் திட்டமும் இலங்கை விமானப்படையிடம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூரை சேர்ந்த இடைத்தரகர் ஊடாகவே இதற்கான நிதியை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன,குறிப்பிட்ட நபர் வெளிநாட்டு கடன்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் யுத்தம் நிறைவடைந்த நாடு ஒன்று, பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் இவ்வளவு பெருந்தொகைப் பணத்திற்கு யுத்த தளபாடங்களை கொள்வனவு செய்ய முயலுவது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன…

Leave A Reply

Your email address will not be published.