2020 இல் இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக மகிந்தவும் மைத்திரியும் ஒன்றாக இணைந்து விஎடுவார்கள் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யப்பா அபேயவார்த்தேன தெரிவித்துள்ளார் .
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த லக்ஷ்மன் யப்பா அபேயவார்த்தேன,மகிந்தவும் மைத்திரியும் இலங்கையின் டிரம்ப் கிம் ஜோங் உன் .அவர்கள் இருவரும் 2019 இந்த ஒன்றாக இணைந்து செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் .
மகிந்தவின் ஆட்சியில் அமைச்சராக இருந்த மைத்திரியை 2015 இல் ரணில் தனது நரிப்புத்தியை பாவித்து மஹிந்தவிடம் இருந்து பிரித்தெடுத்து ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தினார்.2019 இல் மைத்திரி ரணிலுக்கு ஆப்பு வைத்து விட்டு மீண்டும் மகிந்தவுடன் இணைவாரா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை .ஆகவே எது வேண்டும் என்றாலும் நடக்கலாம்.