வலிகாமம் வடக்கில், 100 ஏக்கர் காணி மக்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது – இராணுவ பேச்சாளர்

0

இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள அபகரிப்பு காணிகளின் மேலும் ஒருபகுதி விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் இன்று தெரிவித்துள்ளார் .

வலிகாமம் வடக்கில் மயிலிட்டி துறை வடக்கு ஜே/251 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதியும, ஒட்டகப்புலம் ஜே/252 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதியும், ஜே/254 பலாலி வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதியும், 244 வசாவிளான் கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதியும் மக்களிடம் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தமது சொந்த நிலங்களை இராணுவத்திடம் பறிகொடுத்து விட்டு ஏதிலிகளாக மக்கள் இன்னமும் வேறு இடங்களில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.