வவுனியா வேப்பங்குளம் பகுதியில் கிணற்றில் இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இச்சம்பவம் இன்று(20.06.2018) காலை 10மணியளவில் இடம்பெற்றுள்ளது
வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையில் உள்ள மைதானத்தில் இருக்கும் கிணறு ஒன்றில் மகாறம்பைகுளம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய அனோஜன் (டிலக்சன்) இளைஞனே மேற்படி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் மகாறம்பைகுளம் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தவரென்றும் நேற்று மாலை வேப்பங்குளம் பகுதியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான காணி ஒன்றை பார்வையிட்டு வருவதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்ட இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது .
நேற்றையதினம் குறித்த இளைஞர் வீட்டில் குடும்பத்தாருடன் முரண்பட்டு வெளியில் சென்றுள்ளார் என்றும் அறியப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . குறித்த இளைஞர் குடுப்பதவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனவிரக்தியில் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது .