“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரினால் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க நான் தயாராக இருக்கின்றேன்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது பங்காளிக் கட்சி உறுப்பினரால் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளருக்கு பலரது பெயர்கள் அடிபடுகின்றதே என்று தெரிவிக்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த மாவை.சோ.சேனாதிராஜா எம்.பி., “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டால், கட்டளையிட்டால் நான் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்குத் தயாராக இருக்கின்றேன். கடந்த தடவை முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு கட்சியின் மத்திய குழு என்னையே தெரிவு செய்தது. கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுமே விக்னேஸ்வரனைக் களமிறக்கினர்” – என்று குறிப்பிட்டார்.
இதன்மூலம் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனை ஓரங்கட்டி ஈழத் தமிழர அடிரமை கொள்ளத் திட்டம் தீட்டுகிறதா என்ற கேள்வி எழுப்பட்டுள்ளது. வடக்கில் முதல்வர் விக்கிக்கே மக்கள் ஆதரவு உண்டு. அவரே சிங்கள அரசின் அராஜகங்களை எதிர்த்து குரல் கொடுக்கிறார். அத்துடன் இனப்படுகொலைத் தீர்மானத்தையும் துணிந்து கொண்டு வந்தவர்.