விஜய் மனிதன்! ரஜனி நடிகன்! விஜய் மண்ணின் மகன்! ரஜனி மாமா மகன்!!

நாம் போவது துக்க வீட்டிற்கு! - ரசிகரிகளை கட்டுப்படுத்திய விஜய்

0

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை பார்ப்பதற்காக, தூத்துக்குடி புறப்படும் முன் தன் ரசிகர் மன்றங்களுக்கு முக்கியமான கண்டிஷனைப் போட்டுவிடு நடிகர் விஜய் சென்றுள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களின் 13 குடும்பங்களுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறியவர் நடிகர் சரத்குமார். அதன் பின், நேற்று இரவில் நடிகர் விஜய் 13 பேரில் 10 பேரின் குடும்பங்களுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு ரூ.1 லட்சம் இழப்பீடும் வழங்கியுள்ளார். விஜய்யின் திடீர் விசிட் குறித்து விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம். “விஜய்யோட விசிட் பற்றி தூத்துக்குடியில் மன்ற நிர்வாகிகள் யாருக்கும் தகவல் சொல்லவில்லை. நெல்லை மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர், கடந்த 2 நாள்களாகத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் வீடுகளையும் வீடுகளுக்குச் செல்லும் பாதைகளையும் எங்கிருந்து தொடங்கினால் வரிசையாக அடுத்தடுத்த வீடுகளுக்குச் செல்லலாம் என ஸ்கெட்ச் போட்டனர். நேற்று சென்னையிலிருந்து மதுரை வரை விமானம் மூலம் வந்த விஜய், மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு காரில் வந்தார். அங்கிருந்து நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் மீளவிட்டானில் உள்ள முத்துக்குட்டி என்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் வீட்டுக்குச் சென்றோம். விஜய்யைப் பார்த்த முத்துக்குட்டி, சந்தோஷத்தில் அவரது செல்போனில் படம்பிடிக்க முயன்றார். அப்போது செல்போனைப் பிடுங்கி, “நான் சினிமா சூட்டிங்குக்கு வரலை… துக்கம் நடந்த வீட்டுக்கு ஆறுதல் சொல்ல வந்திருக்கேன். செல்போனில் படம் ஏதும் எடுக்கக் கூடாது” எனச் சொல்லி, செல்போனை மன்ற நிர்வாகிகளிடம் கொடுத்தார்.

ரெப்ரஸ் செய்துவிட்டு முத்துக்குட்டியின் வீட்டிலிருந்து இரவில் 10.25 மணிக்கு கிளம்பினோம். மீளவிட்டானிலிருந்து முதலில் புஷ்பாநகரில் உள்ள ரஞ்சித்குமாரின் வீட்டுக்குச் சென்றோம். அங்கிருந்து, மாசிலாமணிப்புரத்தைச் சேர்ந்த சண்முகம் வீடு, சிலோன் காலனியில் உள்ள கந்தையா வீடு, தாமோதரநகரில் உள்ள மணிராஜ் வீடு, கால்டுவெல் காலனியில் உள்ள கார்த்திக் வீடு, மினிசகாயபுரத்தில் உள்ள ஸ்னோலின் வீடு, அன்னை வேளாங்கண்ணி நகரில் உள்ள அந்தோணி செல்வராஜ் வீடு, திரேஸ்புரத்தில் உள்ள ஜான்சியின் வீடு, லூர்தம்மாள்புரத்தில் உள்ள கிளாஸ்டன், மாப்பிளையூரணி தாளமுத்துநகரில் உள்ள காளியப்பன் ஆகிய 10 பேரின் வீடுகளுக்குப் போனோம்.

இதில் கடைசியாகப் போன, தாளமுத்துநகரில் உள்ள காளியப்பனின் வீட்டுக்கும் லூர்தம்மாள் புரத்தில் உள்ள கிளாஸ்டனின் வீட்டுக்கும் தூத்துக்குடி – மதுரை ரோட்டில் உள்ள சுங்கச்சாவடியிலிருந்து நிர்வாகி ஒருவரின் பைக்கில் ஏறிச் சென்று வந்தார் விஜய். மற்ற வீடுகளுக்கு காரில் சென்று தெரு முனையில் காரை நிறுத்தி சத்தமில்லாமல் சென்று வந்தோம். “யாரும் படம் எடுக்கக் கூடாது” என்பதில் உறுதியாக இருந்தார் விஜய். ஆனால், மினிசகாயபுரத்தில் உள்ள ஸ்னோலினின் வீட்டில் விஜய்க்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட 35 செகண்ட் வீடியோவும் படமும் இரவிலேயே வாட்ஸ் அப்-களில் பரவி வைரலாகிவிட்டது. 10 பேர் வீடுகளிலும் விஜய் முதலில் சொன்னது, “யாரும் படம் எடுக்க வேண்டாம் ப்ளீஸ்” என்பதுதான். “13 பேரில் 10 பேர் குடும்பத்தைச் சந்தித்துவிட்டேன். மீதமுள்ள பேய்குளத்தைச் சேர்ந்த செல்வசேகர், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த ஜெயராமன், உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் ஆகியோரின் வீடுகளுக்குச் செல்ல முடியவில்லை. அந்த 3 வீடுகளுக்கும் போகணும்” எனச் சொன்னார் விஜய். இரவு 10.25 மணிக்கு கிளம்பி, 1.15 வரை 10 பேர் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிவிட்டு இரவில் காரில் மதுரை நோக்கிச் சென்றார் விஜய். ஒரு வீட்டில் 15 நிமிடம் வரை அமர்ந்து ஆறுதல் சொன்னார். முத்துக்குட்டியிடம் பறிக்கப்பட்ட செல்போனை மதுரைக்குக் கிளம்ப காரில் ஏறிய பிறகே கொடுக்கச் சொன்னார்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.