முன்னைய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமாகிய கோத்தபாய ராஜபக்ச 2020 இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாகினால் தான் நாட்டினை விட்டு உடனடியாக வெளியேறுவேன் என்று முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்துள்ளார் .
2020 இல் இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக காலம் இறக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகின்றது .அவ்வாறு கோத்தா வேட்பாளராக களமிறக்கப்பட்டு தேர்தலில் வெற்றியடைந்து ஜனாதிபதியாகினால் தான் நாட்டினை விட்டு வெளியேறுவாராம் என்று மேவின் சில்வா தெரிவித்துள்ளார் .
மேலும் , மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்களுக்கு கோத்தா தான் முழுமையான காரணம். வெள்ளை வான் கலாச்சாரத்தை உருவாக்கியவர் கோத்தா தான் .வெள்ளை வானில் பலர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் என்றும் மகிந்தவின் அரசாங்கத்தில் கோத்தா மற்றும் பஸீல் ஆகியோர் தான் நாட்டினை ஆட்சி செய்ததாகவும் மேவின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார் .
வெள்ளை வான் கலாச்சாரத்தினை கோத்தா தான் கண்டுபிடித்தார் என்று முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார் .ஆனால் இதனை கூறுவதற்கு மேவின் சில்வாவிற்கு அருகதை கிடையாது. .மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பல அடாவடிகளை செய்தவர் தான் இந்த மேவின் சில்வா .அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து ரவுடித்தனத்தில் ஈடுபட்ட மேவின் சில்வா கோத்தாவைகுற்றம் சுமத்துவது கேலிக்குரியது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது .