வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு இன்று நேர்முகப்பரீட்சை

0

வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளை நேர்முகப்பரீட்சைக்கு சமுகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இந்த நேர்முகப்பரீட்சை இன்று (25) தொடக்கம் அலுவலக நேரங்களில், ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இடம்பெறுகின்றது.

வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளில் பதினைந்தாயிரம் பட்டதாரிகளை பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்து வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் குறித்த நேர்முகப்பரீட்சை இடம்பெறவுள்ளது.ஏறாவூர் நகர பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குள், நிரந்தர வதிவிடத்தை கொண்டுள்ள 45 வயதிற்குட்பட்ட, வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் பட்டதாரிகளை இதில் கலந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பயிற்சிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பப்படிவம் திங்கட்கிழமை தொடக்கம் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.