2018 ம் ஆண்டின் மிஸ் இந்தியா போட்டியில் தமிழ் நாட்டினை சேர்ந்த பெண் வெற்றியீட்டி ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் .
டில்லி உட்பட 30 மாநிலங்களை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் தமிழ் நாட்டினை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி அனுகிரீதி வாஸ் மிஸ் இந்தியா பட்டத்தினை தட்டிச் சென்றுள்ளார் .
அனுகிரீதி வாஸ் ஏற்கனவே மிஸ் தமிழ்நாடு போட்டியில் கலந்து கொண்டு மிஸ் தமிழ் நாடு பட்டத்தினை பெற்றிருந்தார்.2018 உலக அழகி போட்டியில் இந்தியாவினை பிரதிநிதித்துவப்படுத்தி அனுகிரீதி வாஸ் கலந்து கொள்ளவுள்ளார் .2017 ம் ஆண்டிற்க்கான உலக அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் உலக அழகியாக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
கல்லூரியில் பட்டபடிப்பினை படிக்கும் அதே வேளையில் அனுகிரீதி வாஸ் மாடலிங் துறையிலும் சாதித்து வருகின்றார் .இவர் தாய் தந்தையர்களை இழந்த 30 சிறுவர்கள் , மற்றும் 30 திருநங்கைகளின் கல்வி ,தங்குமிடம் , வாழ்க்கை செலவு என்பவற்றுக்கு உதவி புரிந்து வருகின்றார் .நல்ல மனது கொண்ட இந்த அழகிய தமிழச்சி 2018 உலக அழகி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.