FIFA கிண்ணம் ! 2-வது சுற்று இன்று ஆரம்பம் ! அர்ஜென்டினா- பிரான்ஸ், உருகுவே-போர்ச்சுக்கல் மோதல்

0

கடந்த 14ந்தேதி ரஷியாவில் கோலாகலமாக தொடங்கியது உலகக்கிண்ண கால் பந்தாட்ட தொடரில் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்துள்ளது . இதன் முடிவில் உருகுவே, ரஷியா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்’, பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஜப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

சவுதிஅரேபியா, எகிப்து (‘ஏ’ பிரிவு), ஈரான், மொராக்கோ (பி), பெரு, ஆஸ்திரேலியா (சி), நைஜீரியா, ஐஸ்லாந்து(டி), செர்பியா, கோஸ் டாரிகா (இ), தென் கொரியா, ஜெர்மனி (எப்), துனிசியா, பனாமா (ஜி), செனகல், போலந்து (எச்), ஆகிய 16 நாடுகள் வெளியேற்றப்பட்டன.

நேற்று ஓய்வு நாளாகும். 2வது சுற்று ஆட்டங்கள் இன்று (30ந்தேதி) தொடங்குகிறது. ‘சி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த பிரான்ஸ் ‘டி’ பிரிவில் 2வது இடத்தை பிடித்த அர்ஜன்டீனா அணிகள் முதல் ஆட்டத்தில் மோதுகின்றன. இலங்கை நேரப்படி இரவு 7.30க்கு இந்தப்போட்டி தொடங்குகிறது.

இரண்டு அணிகளும் முன்னாள் சாம்பியன் ஆகும். அர்ஜென்டீனா 1978, 1986ம் ஆண்டுகளிலும், பிரான்ஸ் 1998ம் ஆண்டி லும் உலககோப்பையை வென்றுள்ளன. இந்த இரண்டு அணிகளில் ஒன்று வெளியேற்றப்பட்டுவிடும்.

இன்று நடைபெறும் 2வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த உருகுவே ‘பி’ பிரிவில் 2வது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன.

3ந்தேதி வரை, 2வது சுற்று ஆட்டங்கள் நடக்கிறது. கால் இறுதி ஆட்டங்கள் 6 மற்றும் 7ந்தேதிகளிலும், அரை இறுதி ஆட்டங்கள் 10 மற்றும் 11ந்தேதிகளிலும், 3வது இடத்திற்கான போட்டி 14ந்தேதியயும் நடைபெறுகிறது. இறுதி போட்டி 15ந்தேதி நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.