அமெரிக்க அரசை முடக்கி விடுவேன்; டிரம்ப் எச்சரிக்கை

0

அமெரிக்காவில் குடியேற்ற சட்டங்களில் திருத்தம் செய்ய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயன்று வருகிறார். அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புதல் உள்ளிட்டவை அவரது திட்டங்களில் அடங்கும். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.க்கள், அவற்றுக்கு ஆதரவு அளிக்க மறுக்கிறார்கள்.

இந்நிலையில், டிரம்ப் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “சுவர் எழுப்புதல் உள்ளிட்ட எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியினர் ஓட்டு போடாவிட்டால், நான் அரசை முடக்கி விடுவேன்” என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.