அரியவகை சங்குடன் ஒருவர் கிளிநொச்சியில் கைது!

0

நேற்று இரவு கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ்பிரிவில் வைத்து சுமார் 90 லட்சம் பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்

தமக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த் பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் செய்தபொழுது இரண்டு வலம்புரிச் சங்குடன் இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் தர்மபுரம் பொலிசார் மூலம் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்த இருப்பதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்

வலம்புரிசங்கை கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் இருந்து கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்கு வைத்திருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் அறியமுடிகிறது என விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.