ஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்!

0

நந்திக்கடல் கோட்பாடுகள், பிரபாகரனியம், விட்டுக் கொடுக்கப்படாத தமிழ் இறைமை என்று பல வடிவங்களில் எழுத்துக்கள் தற்போது காணக் கிடைக்கிறது.

பலர் தொடர்புக்கு வந்து நான் தான் வெவ்வேறு புனைபயர்களில் எழுதுவதாகக் கேட்கிறார்கள்.

இல்லை, நந்திக்கடலை உட்கிரகித்த ஒரு புதுத் தலைமுறையின் சிந்தனை அது. அது வரும் நாட்களில் இன்னும் உக்கிரமாக வெளிப்படும்.

கடந்த வருடம் தமிழீழத்தின் மூத்த அரசியல் பகுப்பாய்வாளர் மு திருநாவுக்கரசு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது கூறினார், ‘ முள்ளிவாய்க்கால் இந்த உலகத்திற்கு புதிய சிந்தனையோட்டத்தைத் தரப்போகிறது, புதிய தத்துவங்களும், கோட்பாடுகளும்,சிந்தனைகளும் ஊற்றெடுக்கும் ஒருபல்கலைக்கழகமாக அது வரலாற்றில் திகழும்’ என்றார்.

அவரது கணிப்பில் ஒரு சிறு தவறு இருக்கிறது. முள்ளிவாய்க்கால் அல்ல, அது ‘நந்திக்கடல்’.

இந்த உலக ஒழுங்கின், புவிசார் அரசியலின் பிரகாரம் ஒரு நிகழ்ச்சி நிரலின் வழி உருவாக்கப்பட்டது ‘முள்ளிவாய்க்கால்:.அது ஒரு பொக்ஸ். அது வழமையான சிந்தனைக்கு மேலும் வலுவூட்டும் ஒரு குறியீடே ஒழிய புதிய சிந்தனகளை தோற்றுவிக்கப் போவதில்லை..

ஆனால் நந்திக்கடல் இந்த ‘முற்றுகையை’ உடைத்து வெளியேறி தனக்கான தனித்துவ வெளியை உருவாக்கியபோதே அதன் சிந்தனையும் பரந்து விரிந்து விட்டது.

அதை நமது இளைய தலைமுறை இன்று நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

2009 இன அழிப்பின் போது 9,10 வயதுகளில் அதுவும் தாயகத்திற்கு வெளியே பல்லின பல் கலாச்சார சூழலில் வாழ்ந்த ஒரு தலைமுறைதான் இந்த சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர்கள்.

இது இன்னும் பல்கிப் பெருகி ஒரு கூட்டுச் சிந்தனையின் வழி
இன்றைய உலக ஒழுங்கைக் கேள்விக்குட்படுத்தி தேசிய இனங்களின் இறைமைக்குரியதாக அதை மாற்றியமைப்பார்கள்.

அது அவர்களால் முடியும், ஏனென்றால் அவர்கள் முள்ளிவாய்க்கால் தோற்றுவித்த அவல, அடிபணிவு, ஒப்படைவு, சரணாகதி அரசியலிலிருந்து முற்றாக விலத்தி நந்திக்கடலின் எதிர்ப்பு அரசியல் உட்கூறுகளை முழுமையாக உள் வாங்கியவர்கள்.

ஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்.

-பரணி கிருஸ்ணரஜனி

Leave A Reply

Your email address will not be published.