இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியான சன்னி லியோன் படம்!

0

சன்னிலியோன் வாழ்க்கை கதை படமான ‘கரன்ஜித் கவுர் த அண்டோல்டு ஸ்டோரி ஆப் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. #SunnyLeone

சன்னிலியோன் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இப்போது ‘வீரமாதேவி’ என்ற பெயரில் தமிழில் தயாராகும் சரித்திர படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சன்னிலியோனின் இயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா. அவரது வாழ்க்கையை ‘கரன்ஜித் கவுர் த அண்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னிலியோன்’ என்ற பெயரில் தொடராக தயாரித்து உள்ளனர். இந்த தொடர் இணையதளத்தில் வெளியாகிறது. சன்னிலியோனின் இளம் வயது வாழ்க்கை போராட்டங்கள், பாலியல் தொழிலுக்கு வந்த சூழ்நிலைகள், சினிமாவில் அறிமுகமானது உள்ளிட்ட வி‌ஷயங்கள் இந்த தொடரில் இடம்பெற்று உள்ளன.

படத்தின் தலைப்பில் கவுர் பெயரை பயன்படுத்த சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதையும் மீறி சன்னிலியோன் வாழ்க்கை தொடர் இணையதளத்தில் வெளியானது. பணம் கட்டிய சந்தாதாரர்கள் மட்டுமே இந்த தொடரை பார்க்க முடியும். ஆனால் தமிழ் படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளம் சன்னிலியோன் தொடரையும் திருடி வெளியிட்டு உள்ளது.

இது சன்னிலியோனுக்கும், படக்குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிக செலவில் இந்த தொடரை படமாக்கி இருக்கிறோம். இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானதால் வருமான இழப்பு ஏற்படும் என்று படக்குழுவினர் வருத்தப்பட்டுள்ளனர். #SunnyLeone

Leave A Reply

Your email address will not be published.