இத்தாலி சென்ற ரொனால்டோவிற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்பு

0

யுவான்டஸ் கால்பந்து கிளப்பில் அதிகாரப்பூர்வ வீரராக அறிவிக்கப்படும் நிகழ்ச்சிக்காக இத்தாலி சென்ற ரொனால்டோவிற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். #Ronaldo

இத்தாலி சென்ற ரொனால்டோவிற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்பு
கால்பந்து விளையாட்டின் தலைசிறந்த வீரராக போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார். யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணியை வீழ்த்தி ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது.

இதோடு ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து வெளியேறினார். இத்தாலியின் முன்னணி அணியான யுவான்டஸில் இணைவதாக தகவல் வெளியானது. பின்னர் 100 மில்லியன் பவுண்டிற்கு ரியல் மாட்ரிட் டிரான்ஸ்பர் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கும், அதனைத் தொடர்ந்து ரொனால்டோவை அதிகாரப்பூர்வ வீரராக அறிவிக்கும் நிகழ்ச்சியில் யுவான்டஸ் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக ரொனால்டோ இத்தாலி சென்றுள்ளார். இங்கு சென்ற ரொனால்டோவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்றனர். #CR7 #Juventus #Ronaldo

Leave A Reply

Your email address will not be published.