இந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது தெரியுமா?

0

இந்திய இராணுவம் தமிழீழத்தை ஆக்கிரமித்திருந்த வேளை புலிகள் தங்கள் சங்கேத மொழியாக(இரகசிய மொழி) முற்சங்ககால தமிழைப் பயன்படுத்தியிருந்தனர். அதனால் புலிகளின் படையணிகள் தமக்குள்ளே தொடர்பு கொண்ட உரையாடலை , தொடர்பாடல்களை இடைமறித்த இந்திய இராணுவ ஆய்வாளர்களால் அதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

டல்லிக்கு அனுப்பி தமது மொழி வல்லுனர்களிடமும் கேட்டும் புரியவில்லை. அதனால் தமிழ்நாட்டு மொழி அறிஞர்களின் உதவியை நாடினர்.

அந்த ஆய்வெல்லாம் நடைபெறுவதற்குள் புலிகள் தமிழின் வேற்று வட்டார வழக்கு (யாழ்ப்பாண,மதுரை, கன்னியாகுமரி,,கோவை, மட்டக்களப்பு) சங்கேத பாசைக்கு மாற்றி விட்டனர். பலவேளை ஒரு மணிநேரத்துக்கு ஒரு வட்டார வழக்கு தமிழை சங்கேத மொழியாக பேசியதால் நம்மால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கௌ்ள முடியவில்லை.

அதனால் அவர்களை வெற்றி கொள்ள முடியாமற் போயிற்று. மொழி வளம் அவர்களின் பலமாக இருந்தது.
இரண்டாம் உலகப்போரில் கூட கிட்லரின் படைகளின் தொடர்பாடலை இடைமறித்து கேட்ட பின்புதான், நேச நாட்டு படைகள் தாக்குதல் தொடுத்தன ஆனால் நமக்கு அந்த சந்தர்ப்பம் கிட்டவில்லை .

-இந்திய இராணுவ மேஜர் ஜெனரல் கல்கட்

Thanks to Thiru B Singam

Leave A Reply

Your email address will not be published.