இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் – டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங்

0

இங்கிலாந்துக்கு எதிரான லண்டனில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #ENGvIND #ViratKohli

இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் – டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங்
லண்டன் :

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லாட்சில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டு தொடரை கைப்பற்றிவிடும் உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் களம் காண்கிறது.

இந்நிலையில், இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இரண்டு அணிகளின் தரப்பிலும் கடந்த போட்டியில் விளையாடியவர்களே இந்த போட்டியிலும் விளையாட உள்ளனர்.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. விராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. தவான், 4. சுரேஷ் ரெய்னா, 5. கேஎல் ராகுல், 6. டோனி, 7. ஹர்திக் பாண்டியா, 8. சித்தார்த் கவுல், 9. உமேஷ் யாதவ், 10. சாஹல், 11. குல்தீப் யாதவ். #ENGvIND #ViratKohli

Leave A Reply

Your email address will not be published.