போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருப்பவர்களில் ஏழு பேர் தமிழர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பெயர் பட்டியலில் குறித்த தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறித்த பெயர் பட்டியலின் அடிப்படையில்,
2003ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள ஸ்ரீ தர்மாகரன்.
2007ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள வேலாயுதன் முரளிதரன்.
2009ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள சிவனேசன் ராஜா.
2012ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள எஸ். புண்ணியமூர்த்தி, எஸ்.கணேசன்.
2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள டபிள்யு. விநாயக மூர்த்தி மற்றும் எஸ்.ஏ. சுரேஸ் குமார்.
ஆகிய 7 தமிழ் கைதிகளின் பெயர்களே இவ்வாறு மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ள கைதிகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.