இளையதளபதி விஜய் மீது சட்ட நடவடிக்கை ! சர்கார் படத்தினால் உருவான பிரச்சனை

0

விஜய் நடிக்க முருக தாஸ் இயக்கும் படம் சர்கார். இந்த படத்தின் போஸ்டர்கள் கடந்த 21 ம் தேதி விஜய் பிறந்தநாளை ஒட்டி வெளியானது. போஸ்டர்களில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். சில சுகாதார அமைப்புகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன.

இந்நிலையில் புகைபிடித்தபடி விஜய் இருக்கும் படங்களை உடனே இணையதளங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

உடனடியாக நீக்காவிட்டால் அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு திரைத்துறையினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.