இவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை!

மக்களோடு மக்களாக தலைவர் பிரபாகரன் மனைவி மதிவதினி 0

0

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் குடும்ப வாழ்க்கை பற்றிக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், இவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை என்று குறிப்பிடுவார்கள்.

வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பெற்றோருக்குச் சொந்தமான வீட்டைத்தான் அனேகமானவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீடு என்று குறிப்பிடுகின்றார்கள். ஆனால் திரு. பிரபாகரன் அவர்களுக்கென்று சொந்தமாக ஒரு அடி நிலம்கூடக் கிடையாது என்பதுதான் உண்மை.

திரு. பிரபாகரன் அவர்களுடைய திருமணகாலம் முதல்கொண்டு அவர்களை நன்கு அறிந்தவர்களாக அன்டன் பாலசிங்கம் தம்பதியினர் இருந்து வருகின்றார்கள். திருமதி அடேல் பாலசிங்கம், தனது சுதந்திர வேட்கை நூலில், பிரபாகரன் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்: ‘மதியை(திருமதி பிரபாகரன்) பொறுத்தவரையில் திருமண வாழ்க்கை ஒன்றும் அவருக்கு மலர் படுக்கையாக அமையவில்லை.

இயல்பாகவே அமைதியும் பொறுமையும் கொண்ட மதி எத்தனையோ தடவைகளில் மிகவும் நெருக்கடியான துயர் சூழல்களை எதிர்கொண்டு சமாளிக்கவேண்டி இருந்தது. பிரபாகரன் அவர்களது போராட்டப் பணிகள் காரணமாக தம்பதிகளுக்கு இடையில் நீண்ட காலப் பிரிவுகளும் ஏற்பட்டதுண்டு. திருமணமான நாளில் இருந்து மதிக்கு ஒரு நிரந்தர வீடும் இருந்ததில்லை.

பாதுகாப்பான குடும்ப வாழ்க்கையும் கிடையாது. இருந்த போதிலும் ஒரு கெரில்லா படைத்தலைவரின் மனைவிக்குரிய துணிச்சலுடனும், கண்ணியத்துடனும், அவர் செயற்பட்டிருந்தார்| என்று திருமதி அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.