ஈழ இனப்படுகொலை புதிய ஆதாரங்கள்! 577 புகைப்படங்கள் 19 வீடியோ காட்சிகள்!

0

2009, முள்ளிவாய்க்கால் மண்ணில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனிதஇனத்திற்கு குந்தகம் விளைவித்தமைக்கான ஆதார புகைப்படங்கள்…

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட கொத்துக்குண்டுத்தாக்குதல் மற்றும் பொசுபரஸ் குண்டுத்தாக்குதல்களின் ஒரு தொகுதி புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் ஊடக நண்பர் மூலம் எனக்கு கிடைத்திருந்தது.

அப்புகைப்படத்தொகுப்பினை பார்வையிட விரும்புபவர்கள் தமிழ்நெற் (tamilnet) இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பார்வையிடமுடியும். 577 புகைப்படங்கள் 19 வீடியோ காட்சிகள் அத்தொகுப்பினுள் அடங்கியுள்ளது. எறிகணைத்தாக்குதலின் போது படுகாயமடைந்தவுடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்த போது மீண்டும் வைத்தியசாலை மீதான எறிகணைதாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டமைக்கான ஆதார புகைப்படங்களும் இத்தொகுப்பில் அடங்கியுள்ளது.

இதில் உங்கள் உறவுகளை அப்போதைய நேரத்தில் நீங்கள் பார்த்திருக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. வைத்தியசாலையில் இறந்த பொதுமக்களின் புகைப்படங்கள் அடையாளம் காணக்கூடிய அளவில் தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கு குந்தகம் விளைவித்தமைக்கான ஆதாரங்களாக இவற்றினை பாதுகாத்து இத்தனை ஆண்டுகளாக வைத்திருந்த அந்நண்பருக்கு நன்றிகள்.

http://tamilnet.com/art.html?catid=13&artid=39117

கார்த்திகேசு சுரேன்

Leave A Reply

Your email address will not be published.