உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்- தொடக்க சுற்றில் எச்எஸ் பிரணாய் வெற்றி

0

சீனாவில் இன்று தொடங்கிய உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் எச் எஸ் பிரணாய் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். #WorldChampionships #BWFWC2018

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் இன்று தொடங்கியது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் எச் எஸ் பிரணாய் நியூசிலாந்தின் அபிநவ் மனோட்டாவை எதிர்கொண்டார். இதில் பிரணாய் 21-12, 21-11 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் மானு ஆத்ரி – பி சுமீத் ரெட்டி ஜோடி பல்கேரியா ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 21-13, 21-18 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

ஆனால் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் சன்யோகிதா – பிரஜக்தா சவாந்த் ஜோடி துருக்கி ஜோடியிடம் 20-22, 14-21 என தோல்வியடைந்து வெளியேறியது.

Leave A Reply

Your email address will not be published.