எந்த தடைவந்தாலும் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கைதிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்தின் தூக்குத் தண்டனை தீர்மானத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இல்லாவிடின் ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் ஒன்றியம் அரசாங்கத்துக்கு நிபந்தனை விதித்துள்ளது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.