என்னை உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் – சன்னி லியோன் தமிழில் டுவிட்

0

பிரபல ஆபாச பட நடிகையும், பாலிவுட் நடிகையுமான சன்னி லியோன், என்னை உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் என தமிழில் டுவிட் செய்துள்ளார். #SunnyLeone

கனடா நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவழி பெற்றோருக்கு பிறந்தவர் நடிகை சன்னி லியோன். அவரது இயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா. அவரது வாழ்க்கை வரலாற்றை கரன்ஜித் கவுர் – சன்னி லியோனின் சொல்லப்படாத கதை என்ற பெயரில் வெப் சீரிசாக எடுக்கப்பட்டு வருகிறது.

கரன்ஜித் கவுராக இருந்தவர் ஆபாச பட உலகுக்கு வந்து சன்னி லியோனாக எப்படி மாறினார் என்பது பற்றி அந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் யூடியூப்பில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இரண்டு நிமிடம் 22 வினாடிகள் ஓடக்கூடிய அந்த டிரெய்லரில் சன்னி லியோனின் பால்ய காலம் முதல் தற்போதை நிலை வரை காட்டப்படுகிறது. அடுத்த வீட்டு பெண்ணாக இருந்து, பாலிவுட் ஸ்டாரான சன்னி லியோன் என வர்ணிக்கப்படுகிறார் அவர்.

தமிழிலும் இதற்கு வரவேற்பு கிடைத்தது குறித்து சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு செய்துள்ளார். அதில், ‘அனைவருக்கும் வணக்கம்.. தமிழ் உட்பட பல மொழிகளில் என் கதை சொல்லப்படுகிறது என்று நான் மிகவும் ஆவலாக உள்ளேன். நான் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.