ஒரு புவி அல்லது பும்ராவால் 5 போட்டிகள் கொண்ட தொடரை வெல்ல முடியாது- மதன் லால்

0

ஒரு புவனேஸ்வர் குமார் அல்லது பும்ராவால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை வெல்ல முடியாது என்று முன்னாள் பயிற்சியாளர் மதன்லால் தெரிவித்துள்ளார். #Bhuvi #Bumrah

ஒரு புவி அல்லது பும்ராவால் 5 போட்டிகள் கொண்ட தொடரை வெல்ல முடியாது- மதன் லால்
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக இந்தியா புவனேஸ்வர் குமார், பும்ரா, இசாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களை தயார் செய்து வைத்திருந்தது.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது பும்ராவின் பெருவிரலில் முறிவு ஏற்பட்டது. இங்கிலாந்துக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியின்போது புவனேஸ்வர் குமாருக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

பும்ரா முதல் இரண்டு மூன்று போட்டிகளில் பங்கேற்க முடியாது நிலையிலும், புவனேஸ்வர் குமார் எந்த போட்டியில் களம் இறங்குவார் என்பதும் தெரியாமல் உள்ளது. அவர்கள் காயம் இந்திய அணிக்கு பின்னடைவை கொடுக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஒரு புவனேஸ்வர் குமார் அல்லது பும்ராவால் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெற்றி பெற வைக்க முடியாது என்று முன்னாள் ஆல்ரவுண்டரும், இந்திய அணி பயிற்சியாளரும் ஆன மதன் லால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதன்லால் கூறுகையில் ‘‘ஒரு புவனேஸ்வர் குமார் அல்லது பும்ராவால் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்ல முடியாது. அனைத்து பவுலர்களும் ஒன்றிணைந்து தீயாக பந்து வீச வேண்டும். ஒரு செசனில் கூட எதிரணியை ஆதிக்கம் செலுத்த விடக்கூடாது. சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் வேகப்பந்து வீச்சாளர்கள் நெருக்கடியை உருவாக்க வேண்டும்’’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.