கடைக்குட்டி சிங்கம் வெற்றிவிழாவில் தமிழக விவசாயிகளுக்கு ரூ.1 கோடி வழங்கிய சூர்யா

0

கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் விவசாயிகளுக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டது. #KadaikuttySingam

கார்த்தி – சாயிஷா நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். பாண்டிராஜ் இயக்கியிருக்கும் விவசாயம் மற்றும் குடும்பத்தின் ஒற்றுமையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் வெற்றி விழா இன்று நடந்தது. இதில் இயக்குநர் பாண்டிராஜ், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா, கார்த்தி, சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ், சரவணன், சூரி, பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், யுவராணி, மௌனிகா, இளவரசு மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

இதில் தமிழக விவசாயிகளின் நலன் மற்றும் அவர்களது மேம்பாட்டுக்காக ரூ.1 கோடியை 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா வழங்கினார். மேலும் விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேருக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்கப்பட்டது. #KadaikuttySingam

Leave A Reply

Your email address will not be published.