கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம்! பெண் சுங்க அதிகாரி ஒருவர் உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதல்

0

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் சுங்க அதிகாரி ஒருவர் உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தையடுத்து கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் ஒருவித பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு இலக்கானவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குவைட் நாட்டு பிரஜைகள் இருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் சுங்கபிரிவினர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய குவைட் பிரஜைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர.

இன்று நாட்டிற்கு வந்த குறித்த இருவரும் நாய் ஒன்றையும் நாட்டிற்குள்கொண்டு வர முயற்சித்துள்ளனர். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட சுங்கபிரிவினர் நாயை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரினர்.

எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்த குவைட் பிரஜைகள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவத்தையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவித பதற்றம் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.