கலைக்கு முடிவேயில்லை என்பதே சீதக்காதி – விஜய் சேதுபதி

0

கலைக்கு முடிவே இல்லை, கலை சாகா வரம் பெற்றது என்ற செய்தியை சொல்லும் படமே சீதக்காதி என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். #Seethakathi #VijaySethupathi

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்கு பிறகு பாலாஜி தரணிதரன் – விஜய் சேதுபதி மீண்டும் இணைந்திருக்கும் படம் சீதக்காதி. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மேக்கிங் ஆஃப் ஐயா என்ற வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில், படம் பற்றி நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது,

” சீதக்காதி சிவாஜி கணேசன் சார் அல்லது கமல்ஹாசன் சார் போன்ற பெரிய நடிகர்களுக்கு பொருத்தமான ஒரு படம். ஆரம்பத்தில், பாலாஜி தரணிதரன் இந்த படத்தில் நடிக்க தமிழ் சினிமாவின் சில பெரிய நடிகர்களை நினைத்திருந்தார். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. கைகளில் வேறு எந்த ஆப்ஷனும் இல்லாமல், அவர் என்னை அதில் நடிக்க வைக்க விரும்பினார். இந்த படத்திற்கு செய்ய வேண்டியதை சரியாக செய்து உள்ளேன் என்று நம்புகிறேன்.

இந்த படத்தில் நான் ஒரு 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறேன். சீதக்காதி ஒரு ஆத்மார்த்தமான படம், அது கலைக்கு முடிவே இல்லை, சாகா வரம் பெற்றது என்ற செய்தியை சொல்லும். அது யாரோ ஒருவரின் அல்லது மற்றொருவரின் மூலம் வாழும். என் 25-வது படமாக இந்த அற்புதமான படம் அமைவதற்கு நான் மிகவும் பாக்கியவானாக இருக்கிறேன் ” என்றார்.

ரம்யா நம்பீசன் மற்றும் காயத்ரி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கோவிந்த் மேனன் இசையமைத்திருக்கும் இந்த படத்துக்கு சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் (Passion Studios) சார்பில் உமேஷ் ஜி.ரெட்டி தயாரித்திருக்கிறார். #Seethakathi #VijaySethupathi

Leave A Reply

Your email address will not be published.